பரீட்சை ஹாலில்.......
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா?
====================================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
======================================
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்கு பெரிய பை எங்க கடையில இல்லியே!
=======================================
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
=======================================
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
=====================================
No comments:
Post a Comment