Saturday, November 16, 2013

Tamil jokes

மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும்: தமிழ்ப் பேராசிரியை மு.குருவம்மாள்
ஒரு மொழி அழிந்தால், அதனைப் பின்பற்றும் அந்த இனமும் அழிந்து விடும் என,
காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள்
தெரிவித்தார்.
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் இளங்கலை தமிழ்த் துறை (சுயநிதிப்
பிரிவு) துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தி கிராம
பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியை மு. குருவம்மாள் தலைமை வகித்து,
வகுப்புகளைத் தொடக்கி வைத்துப் பேசியது:
உலகில் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும், ஆயுதம் (ஆயுத எழுத்து)
தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் மட்டுமே உள்ளது. அந்த வகையில், ஆயுதம்
தாங்கிய மொழியைச் சேர்ந்தவர்களான நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை
முதலில் தீர்மானிக்க வேண்டும்.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு செயல்களை நம் குழந்தைகளுக்கு
கற்பித்து வருகிறோம். இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு, இலக்கியப்
படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
பெயர் எழுதத் தெரிந்துவிட்டாலே, அவரைக் கற்றவராக ஏற்கும் நிலை உள்ளது.
அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். குழந்தைகளைப் போல் மாணவர்களும்
தொடர்ந்து கேள்வி கேட்கும் வழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
மாணவர்களின் சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.
கேட்க உதவும் செவிகளின் அமைப்பே, கேள்விக் குறி போல் இருப்பதை அனைவரும்
உணர வேண்டும்.
தமிழ் கற்றால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான எண்ணத்தை
மாணவர்களும், பெற்றோர்களும் கைவிட வேண்டும். தமிழ் சமுதாயத்தின்
கலாசாரத்தினையும், பண்பாட்டினையும் தமிழ் கற்கும் மாணவர்களால் மட்டுமே
உணர முடியும். தமிழ் கற்கும் ஆவல் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை
ஏற்படக்கூடாது.
ஒரு மொழி என்பது அதனை பேசும் மக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும்
வெளிப்படுத்தும் ஆயுதமாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவர்கள்
பேசும் மொழியை அழித்தாலே போதுமானது. அந்தச் செயலை சரியாக செய்த நாடு
இலங்கை.
உங்கள் வாழ்க்கையினை அடுத்தவர் கையில் ஒப்படைக்காமல், நீங்களே
(மாணவர்கள்) தீர்மானிக்கும் சக்தியாக உருவாக வேண்டும். ஆயுதம் தாங்கிய
தமிழ் மொழியை கற்க வரும் மாணவர்கள், அதனை சரியான பாதையில் பயன்படுத்த
வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் நா.மார்கண்டேயன்: தாய் மொழியான தமிழில் ஞானம்
இல்லாதவர்களுக்கு, பிற மொழியிலும் சரியான ஞானத்தைப் பெற இயலாது. 50 ஆம்
ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தக் கல்லூரியில் தற்போது, சுயநிதிப்
பிரிவில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்கும்
மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பத்திரிகை துறையில்
தமிழ் மாணவர்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் துறையில் சேர்ந்துள்ள
28 மாணவ, மாணவிகளுக்கு ஜி.டி.என். கல்லூரியின் தனி அலுவலர் இரா. ஆறுமுகம்
சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில், அக் கல்லூரியின் செயலர்
வெ. ஆதிநாராயணசாமி, தமிழ்த் துறை தலைவர் மு. விஜயலட்சுமி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப் போறேன்.
பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....:
இடிபிஸ் : ஸுகிரி, முன்காலத்தில, ஒரே ஒரு மிருகம் மட்டும்
துப்பாக்கி வைத்திருந்தது !. எதுன்னு தெரியுமா ?.
ஸுகிரி : எனக்கு தெரியாதுப்பா, நீயே சொல்லிடு !.
இடிபிஸ் : இது கூடவா உனக்கு தெரியாது, "டிராகன் (கன்) தான்"
ஸுகிரி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌' யே
வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும் ... -
எடிசனின் நெருங்கிய நண்பன்
ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
****************
சில விடையங்கள் முடியாது ...? எது ..?
1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது
2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது
3) கோல மாவில தோசைசுட முடியாது
4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்
இருக்க முடியாது ..!
5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
"வினாத்தாள்களை திருட முயன்ற குற்றத்திற்காக தலைவரின் மகனை கைது
செஞ்சாங்களே அப்புறம் என்னாச்சு....?" "கடினமான கல்விமுறைதான் காரணம்னு
விடுதலை பண்ணியாச்சு.."
"இது கொலையா தற்கொலையா?" "ஒருத்தனுக்குத்தான் தெரியும். ஆனா அவன் சொல்ல
மாட்டான்." "யாரவன்?" "செத்தவன்தான்!"
"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப் பேர் வந்து கதவைத் தட்டறாங்க...?"
"என் வீட்டுக்காரரோடு தூக்கத்துல எழுந்து நடந்து போகிறப்ப 'பிரண்ட்ஸ்'
ஆனவங்கலாம்...! கூப்பிட வந்திருக்காங்க...!"
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!
1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. ( கையில
Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!

1 comment:

  1. ஏற்கனவே கேள்விப்பட்டதா இருந்தாலும் எல்லா ஜோக்கும் சூப்பர்...

    முக்கியமான வேண்டுகோள்;

    In settings -> Post comments -> Show word verification -> No

    என்று மாற்றுங்கள்...இல்லையேல் பல பின்னூட்டங்களை நீங்கள் இழக்க நேரிடும்... பெரும்பாலும் பின்னூட்டம் இடுபவர்கள் இதை விரும்புவதில்லை

    ReplyDelete