Tuesday, November 29, 2016

Kadii

😎🙃😇😁😃😆😀😄😬😂😅
இன்றைய தாங்கமுடியாத கடிகள் -
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான். ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான்.  ஏன்னு  கேட்டதற்கு...
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
மாடு போல சின்னதா இருக்கும்...! ஆனா அது மாடு இல்ல...!

அது என்ன?

தெரியலையா?

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளி படைச்சே?👔💥😏
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...?

தெரியலையே.... என்னது?

தலையிலே முடி இருக்கிறது தான்...!😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.

செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது😎😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!

கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!😎😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏😎🛏🛏

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க..!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
👵👵👵😄😄😄
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
ராத்திரியில சூரியன் எங்கே போகுது?...

எங்கேயும் போகல...., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை!.😎😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!

டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு!
😜😜😜
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
சோப் டப்பாலே ஏன் சின்ன சின்ன ஓட்டையா போட்டுருக்காங்க?

ஏன்னா, பெரிய ஓட்டை போட்டா சோப் கீழ விழுந்துடும்!😎
🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏
உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?

ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.
😬😬😬😬😬        🙏🙏

Fwd: Kadi kadi

---------- Forwarded message ----------
From: "vetri vel" <vetrivatch@gmail.com>
Date: Nov 21, 2016 1:50 PM
Subject: Kadi kadi
To: "vetrivatch.1121" <vetrivatch.1121@blogger.com>
Cc:

ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
😂😂😂

தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?

ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..

😂😂😂

( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)  

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"  

"வீட்லதான்டா இருக்கேன்..."  

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"  

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
😂😂😂

அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
😂😂😂

நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
😂😂😂

"ஏன் ஸ்கூட்டரை திருடினே…?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"
😂😂😂

பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?"

"தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?"

"இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!"
😂😂😂

முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ
கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
😂😂😂😂😂😂😂😂